மின்சாரம் வீணாவதைத் தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு.

பவர் கிரிட்டிலிருந்து வெளிவரும் அதிக மின்சார ஹார்மானிக்ஸ் அலைகளைக் கட்டுப்படுத்தி சீரான மின்சாரம் பெற்றுத் தந்து, மின்சாரம் வீணாவதைத் தடுக்க ஸ்டேட்காம் மின் சாதனத்தை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர். பவர் கிரிட்டிலிருந்து வெளிவரும் அதிக மின்சார ஹார்மானிக்ஸ் அலைகளைக் கட்டுப்படுத்தி சீரான மின்சாரம் பெற்றுத் தந்து, மின்சாரம் வீணாவதைத் தடுக்க ஸ்டேட்காம் மின் சாதனத்தை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் எஸ். கண்ணன், துறைப் பேராசிரியர்கள் சோ. பொன்னாயிரம் சுந்தரவேல், கே. விஜயகுமார் ஆகியோர் பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்தில் ஸ்டேட்காம் என்ற 3 ஃபேஸ் இன்வெர்டர் கருவியை சின்க்ரோனஸ் மோட்டார், டிசி கெப்பாசிட்டர் பில்டர், லிங்க் ரியாக்டர் மற்றும் பொது கப்ளிங் போன்ற உபகரணங்களைக் கொண்டு இந்த கருவியை தயாரித்துள்ளனர். மின் தொகுப்பிலிருந்து (பவர் கிரிட்) நம் பயன்பாட்டிற்கு வரும் மின்சாரம் கூடுதல் ஹார்மானிக்ஸ் அலைகளோடு வருகிறது. இதனால் பயன்பாட்டில் உள்ள ஜெனரேட்டர், மோட்டார் போன்றவற்றில் காயில்கள் எரிந்துவிட நேர்கிறது. டிரான்ஸ்பார்மரில் வரும் கேபிள் வயர்களும், டிரான்ஸ்பார்மரிலும் சில சமயம் அதிக மின் ஓட்டம் ஏற்பட்டு தீப்பொறிகள் வெளிவரும். ஆனால் தற்போது இந்த பேராசிரியர்கள் தயாரித்துள்ள ஸ்டேட்காம் கருவியை மின் தொகுப்பில் பொருத்தினால், மின் தொகுப்பின் அலைகள் ஸ்டேட்காம் ஆல் ஹார்மனிக்ஸ் என்ற மின்சாரத்தால் விளையும் தீய விளைவுகளை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் தேசிய அளவிலான மின்சாரம் வீணாவதையும், மேலும் சாதாரணமாக எந்த காரணமும் இல்லாமல் மோட்டார்கள் சூடாவதையும் தடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு சீராக்கப்பட்ட மின்சாரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர்களுக்கு அனுப்பப்படுவதால், அந்த டிரான்ஸ்பார்மர்களும் முழு கொள்ளளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் விவசாய மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் முக்கிய சாதனங்களில் காயில்கள் எரிந்து வீணாவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. பவர் பேக்டர் மற்றும் ரீயாக்டிவ் பவர் போன்ற காரணிகளை அளந்து தெரியப்படுத்தும் கருவியான ஆர்.பி.டி. 11 என்ற கருவி இந்த ஸ்டேட்காமில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெல்டிங் செய்யும் சாதனம் போன்ற மின்சாதனங்களின் பவர் பேக்டர்களையும் சமன் செய்வதால், மின் சிக்கனம் செய்து கொள்ளலாம். நாட்டில் மின் உற்பத்தி குறைவாக உள்ள இந்த சூழ்நிலையில் கிரிட் மின்சாரத்தை வீணாக்காமல் முறையாக உபயோகப்படுத்தவும், மற்ற சாதனங்கள் பழுதாவதை தடுக்கவும் இந்தக் கருவி பயன்படும் என பேராசிரியர்கள் கூறினர். இந்த கருவியை உருவாக்கிய பேராசிரியர்களை பல்கலைக்கழகத்தின் வேந்தர் க. ஸ்ரீதரன், துணைவேந்தர் ச. சரவணசங்கர், பதிவாளர் வெ. வாசுதவேன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.