மைக்கேல் பாரடே part-A

தற்போது நாம் பயன்படுத்தும் மின்சார உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் டைனமோவைக் கண்டறிந்தவர் மைக்கேல் பாரடே. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இரும்புக் கொல்லரின் மகனாகப் பிறந்த இவர் தமது 13 வது வயதில் ஒரு அச்சகத்தில் புத்தகங்களுக்கு அட்டை ஒட்டும் பணியாளராக வேலைக்குச் சேர்தார். அச்சகத்துக்கு வரும் எல்லாப் புத்தகங்களையும் படித்துத் தமது அறிவை வளர்த்துக் கொண்டார். ஒருமுறை லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் புகழ் பெற்ற விஞ்ஞானி "சர்.ஹம்ப்ரி டேவி" ஆற்றய சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு பாரடேவுக்குக் கிட்டியது. சொற்பொழிவை ஆர்வத்துடன் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டார். அக்குறிப்புகளைப் புத்தக வடிவில் தைத்து. அதை டேவிக்கு அனுப்பி வைத்தார். கூடவே டேவியின் ஆராய்ச்சிக்கூடத்தில் தான் பணி புரிய விரும்புவதாக விண்ணப் பித்தார்.