தாமஸ் ஆல்வா எடிசன். நூற்றுக்கும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகளைத் தந்தவர். ஒருநாள், 1914 ஆம் ஆண்டு அவருடைய பரிசோதனை சாலை தீப்பிடித்து எரிந்தது. அனைத்தும் எரிந்துவிட்டன. அடுத்தநாள் காலை பரிசோதனை சாலையைப் பார்வையிட்ட எடிசன் கூறினார் "தீ பிடித்து எரிவதிலும் நன்மை உள்ளது. அத்துடன் நம்முடைய தவறுகளும் எரிந்து போய் விடுகின்றன. அது புதிய முயற்சிக்கு வழிவகுக்கும்"