இயற்பியில் அறிஞர் பிறந்த தினம்

ஜனவரி 1. எஸ்.என்.போஸ் (1894) - சத்தியேந்திர நாத் போஸ், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இயற்பியலாளர். தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங் என்ற புத்தகத்தில் பிளாங், யூகமாக எழுதியிருந்த ஒரு சமன்பாட்டை சரியாக எழுதி வெளியிட்டார்.அதன் பெயர் போஸ் ஐன்ஸ்டீன் புள்ளியியல். அப்போது அவருக்கு வயது 30. 2. கிளாஸியஸ் (1822) - ருடால்ஃப் ஜூலியஸ் இம்மானுவேல் கிளாஸியஸ், ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர். கார்னட் சைக்கிளின் தத்துவத்தையும், வெப்பத்தின் கொள்கையையும் வெளியிட்டவர். 1850-ல் தெர்மோடைனமிக்கின் இரண்டாவது விதியைக் கண்டுபிடித்தார். 1865-ல் எண்ட்ரோபி தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். 4. ஜோசப்ஸன் (1940) - முதன்முதலில் சூப்பர் கரண்ட் என்ற ஒன்றை கண்டுபிடித்தார். வோல்டேஜ் இல்லாமல் அதிக தூரம் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வழியைக் கண்டுபிடித்தார். அதுமட்டுமல்லாமல், மின்சாரத்திற்கும் வோல்டேஜிற்கும் இடைப்பட்ட கணக்கீடுகளைக் கண்டுபிடித்தார். 5. ஸ்டீபன் ஹாக்கிங் (1942) - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், இங்கிலாந்தில் பிறந்தவர். அண்டவியல், குவாண்ட்டம் ஈர்ப்பு,பிளாக் ஹோல்ஸ், வெப்ப இயக்கவியலுக்கான தொடர்புகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பிளாக் ஹோல்ஸிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிற்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டுள்ளது. 6. ஹர்கோபிந்த் கொரானா - பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூறியல் உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக் குறியீடு பற்றியும், புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். 1968ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். 7. வீன் (1864) - வில்லெம் வீன் என்று அழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன்,ஜெர்மானியர். வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். 1911ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். 8. ராகேஷ் சர்மா (1949) - பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், விண்வெளியில் பறந்த முதல் இந்தியர். விண்வெளிக்குச் சென்ற 138வது வீரர் இவர். 9. எட்வர்ட் டெல்லர் (1908) - ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். ஹைட்ரஜன் குண்டின் தந்தை இவர்.ஸ்ப்பெக்ட்ரோகோபி, மாலிக்யூலர் பிசிக்ஸ், நியூக்ளியர் சயின்ஸ் போன்ற துறைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது. 10.பெஞ்சமின் பிராங்க்ளின் (1706) - ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர்களில் ஒருவர். சிறந்த அறிவியலாளர். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகள் மகத்தானவை. பிராங்க்ளின் ஸ்டவ், ஓடோமீட்டர், பை ஃபோக்கல்ஸ், லைட்னிங் ராட் போன்றவை இவரது கண்டுபிடிப்புகள். 11. ரால்ஃப்.எச். பவ்லர் (1889) - பிரிட்டிஷ் இயற்பியலாளர். வானியல் ஆராய்ச்சியாளரும் கூட. 1928 ஆம் ஆண்டு எலக்ட்ரான் எமிஷன் மற்றும் எலெக்ட்ரான் பாண்ட் தியரி குறித்து ஆராய்ச்சிகள் வெளியிட்டுள்ளார். 1931- ல் தெர்மோடைனமிக்ஸ் பூஜ்ஜிய விதிகளுக்கு வித்திட்டவர். 12.பால் ஏர்ன்பெஸ்ட் (1880) - டச்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர், குவாண்டம் மெக்கானிக்ஸ், ஸ்ட்டாடிஸ்டிக்கல் மெக்கானிக்ஸ், பேஸ் டிரான்சிஷன் போன்ற துறைகளில் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 13. ஜேம்ஸ் வாட் (1736) - ஸ்காட்லாந்து நாட்டுக்காரர். நீராவி இயந்திரத்தை உருவாக்கியவர். 14. ஆண்ட்ரூ மேரி ஆம்ப்பியர் (1775) - பிரான்ஸ் நாட்டு இயற்பியலாளர். கணிதவியலாளரும் கூட. மினகாந்தவியலை கண்டுபிடித்தவர். மின்சாரத்தின் அலகாக ஆம்ப்பியர் என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. 15. லேவ் லேண்டா (1908) - ரஷ்ய நாட்டு இயற்பியலாளர். குவாண்டம் மெக்கானிக்ஸ், டென்சிட்டி மேட்ரிக்ஸ் போன்றவைகளைக் கண்டுபிடித்திருக்கிறார். 16.பால் லங்கேவின் (1872) - பிரான்ஸ் நாட்டு இயற்பியலாளர். பேரா மேக்னட்டிசம் மற்றும் டயா மேக்னட்டிசம் துறை ஆய்வுகளில் ஈடுபட்டவர். முதல் உலகப்போரின் போது பீசோ எலக்ட்ரிக் விதியைப் பயன்படுத்தி அல்ட்ரா சவுண்ட் அலைகளைப் பயன்படுத்தி எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் இடத்தைக் சரியாக கண்டுபிடிக்கும் யுக்தியை வகுத்துத்தந்தார். 17. ஹைடேக்கி யுகாவா (1907) - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹைடேக்கி யுகாவா, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத்துகளைக் கண்டறிந்தவர். 18. ராபர்ட் பாயில் (1627) - அயர்லாந்து நாட்டு இயற்பியல் மற்றும் வேதியியலாளர். நவீன வேதியியலின் முன்னோடி விஞ்ஞானி. 19. ராஜா ராமண் ணா (1925) - கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், அணு விஞ்ஞானி. 20. எட்வர்ட் மார்லே (1838)- எட்வர்ட் வில்லியம்ஸ் மார்லே, குரோனோகிராப்பை முதன்முதலில் வடிவமைத்தவர்.வளிமண்டலத்தில் கலந்திருக்கும் வாயுக்களின் கலவையின் அளவை சரியாக கணித்தவர். 21. லேங்மூர் (1881) - இர்விங் லேங்மூர், அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியலாளர். ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எலெக்ட்ரானின் கட்டமைப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர். ஹைட்ரஜன் மூலம் வெல்டிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். 22. மோஸ்பியர் (1929) - திட இரிடியத்தில் உள்ள அதிர்வுகளை முதன்முதலில் கணித்தவர். பிப்ரவரி 2 கிராமர்ஸ் (1894) - ஹான்ஸ் கிராமர், டச்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். அட்டாமிக் எலக்ட்ரானில் போட்டான் வெளிப்பாடு குறித்த கிராமர்ஸ் ஹெய்சன்பர்க் சூத்திரத்தை வெளியிட்டிருக்கிறார். 4 ஹண்ட் (1896) - பிரட்ரிக் ஹெர்மான் ஹண்ட் என்று அழைக்கப்படும் இவர், ஜெர்மன் நாட்டு இயற்பியலாளர். குவாண்டம் தியரியில் அணுக்களின் கட்டமைப்பு குறித்து அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். குவாண்டம் டனலிங் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார். 8 டேனியல் பெர்னோலி (1700) - நெதர்லாந்து நாட்டு கணிதவியலாளர். கணிதத்தில் நிகழ்தகவு மற்றும் புள்ளியியல் சூத்திரங்களை வகுத்தவர். இவர் பெயரில் உள்ளது பெர்னோலி தியரம் என்ற கணக்கீடு. 10 டபிள்யூ. பிராட்டெய்ன் (1902) - வால்ட்டர் ஹோசர் பிராட்டெய்ன், அமெரிக்க இயற்பியலாளர். ஜான் பார்தீன், வில்லியம் ஷாக்லி ஆகியோருடன் இணைந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தார். 1956-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். 11 கிப்ஸ் (1839) - ஜோசய்யா வில்லார்ட் கிப்ஸ், அமெரிக்க விஞ்ஞானி. வெக்டர் கணிதத்தை அறிமுகப்படுத்தியவர். 11 தாமஸ் ஆல்வா எடிசன் (1847) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், போனோகிராப்பை கண்டுபிடித்தவர். செய்முறைக்கான ஒளிவிளக்கு, மோஷன் பிக்சர் காமிரா போன்றவற்றை முதன்முதலில் உருவாக்கியவர். 12 ஹெய்ன்ரிச் லென்ஸ் (1804) - ரஷ்ய நாட்டு இயற்பியலாளர். 1833-ல் எலக்ட்ரோ டைனமிக் குறித்த லென்ஸ் விதியை வெளியிட்டார். கடல்நீரில் உள்ள இயற்பியல் குணங்களைக் கொண்டு பருவநிலை மாற்றத்தை கணித்தவர். 13 வில்லியம் ஷாக்லே (1910)- டிரான்சிஸ்டர் வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர். 1950 வாக்கில் வணிகரீதியிலான டிரான்சிஸ்டரை வடிவமைத்தார். 1956-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர். 14 ரீஸ் வில்சன் (1869)- சார்லஸ் தாமஸ் ரீஸ் வில்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்.மேகக்கூட்டங்கள் குறித்த ஆராய்ச்சியை முதன்முதலில் வெளியிட்டவர். 1927-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். 15 கலிலியோ கலிலி (1564) - இத்தாலி நாட்டுக்காரரான இவர், சிறந்த வானியலாளர். வானியல் தொலைநோக்கி வடிவமைப்பில் இவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது. நவீன இயற்பியலின் தந்தை இவர். 18 வோல்டா அலெஸ்சாண்டரோ (1745) - இத்தாலி நாட்டுக்காரரான இவர், 1800-ல் பேட்டரியைக் கண்டுபிடித்தார். 19 நிக்கோலஸ் கோபர்நிகஸ் (1473) - போலந்து நாட்டுக்காரரான இவர், வானியலாளர். சூரிய மையக் கொள்கையை வகுத்துத் தந்து, வானவியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற வாதத்தைச் சரியல்ல என்று நிரூபித்து, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். 20 லட்விக் போல்ட்ஸ்மேன் (1844) - ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பெரும் பங்களிப்பை அளித்தவர். வளிமங்கள் மீது சீரான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். 21 சாந்தி ஸ்வரூப் பட்நகர் (1894) – இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி. இவரது பெயரில் சிறந்த விஞ்ஞானிகளுக்கான விருது வழங்கப்படுகிறது. 22 பெல்டியர் (1785) - ஜீன் சார்லஸ் அதானஸ் பெல்டியர், பிரான்ஸ் இயற்பியலாளர். மின் விசையில் ஏற்படும் விளைவுகளை பெல்டியர் விளைவு என்ற தத்துவத்தின் மூலம் விளக்கியுள்ளார். 24 பியோட்டர் லேப்தேவ் (1866) - ரஷ்ய இயற்பியலாளர். திடப் பொருளில் ஒளியின் அழுத்தத்தை முதன்முதலில் கண்டறிந்தவர். மின்காந்த அலைகள் குறித்து இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 26 கிளாப்பிரான் (1799) - கிளாப்பிரான் பெனாய்ட் பால் எமிலி, பிரான்ஸ் இயற்பியலாளர். நவீன தெர்மோடைனமிக் கொள்கையை வகுத்தவர். மார்ச் மார்ச்-3 • அலெக்சாண்டர் கிரகாம்பெல் (1847) - பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியர். தொலைபேசியை உருவாக்கியவர். மார்ச்-6 • பிரான்ஹோபர் (1787) - ஜெர்மனைச் சேர்ந்த ஒளியியலாளர். சூரிய ஒளியக்கதிரில் உள்ள கரும் பட்டைகளை இவர் கண்டுபிடித்ததால், இந்தக் கரும்பட்டைகளுக்கு பின்னாளில் பிரான்ஹோபர் வரிகள் என்று பெயர் வந்தது. 1814ஆம் ஆண்டு நிறமாலைமானியை (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) கண்டுபிடித்தார். • கார்னு (1841) - மேரி ஆல்பிரட் கார்னு, பிரான்ஸ் இயற்பியலாளர். ஒளியியல் மற்றும் நிறமாலைமானி குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். மார்ச்-8. • ஒட்டோ ஹான் (1879) - அணு வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படும் இவர், ஜெர்மனியைச் சேர்ந்தவர். ரேடியோ ஆக்டிவிட்டி மற்றும் ரேடியோ கெமிஸ்ட்ரி குறித்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர். மார்ச் -12 • குஸ்டவ் கிர்சாஃப் (1824) - ஜெர்மன் இயற்பியலாளர். எலெக்ட்ரிக்கல் சர்க்யூட், ஸ்பெக்ட்ரோஸ்கோபி, வெப்பத்தினால் கரும்பொருளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்தவர். மின் சுற்று குறித்து இவரது கொள்கைகள், கிர்சாஃப் விதி என்று அழைக்கப்படுகிறது. வெப்ப வேதியியல் குறித்தும் விதிகளை வகுத்தவர் இவர். மார்ச் -14 • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879) - ஜெர்மனில் பிறந்த இவர், நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1921- ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார். ஒளிமின்விளைவு விதி குறித்தும், குவாண்டம் தியரி குறித்தும் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மார்ச்-15 • வென்ச்சுரி (1746) - ஜியோவன்னி பட்டிஸ்டா வென்ச்சுரி, இத்தாலிய இயற்பியலாளர். ஒரு குழாயின் சுருங்கிய பகுதி வழியாக ஒரு திரவம் பாயும்போது, திரவ அழுத்தம் குறையும் என்பதைக் கண்டுபிடித்தார். மார்ச்-16 • ஜார்ஜ் சைமன் ஓம் (1789) - ஜெர்மனியில் பிறந்த இவர், ஒரு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். மின்சாரத்தில் மின் அழுத்தத்திற்கான தொடர்பை வரையறுத்தார். அதுவே, ஓம்ஸ் விதி என்று அழைக்கப்படுகிறது. மார்ச்-18 • ருடால்ஃப் டீசல் (1858) - ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல், ஜெர்மன் பொறியாளர். டீசல் என்ஜினை முதன்முதலில் வடிவமைத்தவர் இவர்தான். மார்ச்-19 • ஃபிரட்ரிக் ஜோலியட் (1900) - ஜீன் பிரட்ரிக் ஜோலியட் கியூரி, பிரான்ஸ் இயற்பியலாளர். 1935-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி மேடம் கியூரியின் மகள் ஐரின் கியூரி இவரது மனைவி. மார்ச்-20 • ஃபிரிட்ஸ் புளூமர் (1881) - ஆஸ்திரிய இயற்பியலாளர். ஒலி அலைகளை பதிவு செய்யும் மேக்னட்டிக் பட்டையை உருவாக்கினார். மார்ச்-21 • ஃபோரியர் (1768) - ஜோசப் ஃபோரியர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணித மற்றும் இயற்பியல் ஆய்வாளர். கிரீன்ஹவுஸ் விளைவு விதியை முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர் இவர். மார்ச்-22 • ராபர்ட் அண்ட்ரூஸ் மில்லிகன் (1868) - அமெரிக்க இயற்பியலாளர். ஒளிமின் விளைவு சோதனையில் எலெக்ட்ரானின் பங்கு குறித்தது இவரது ஆய்வு. மார்ச்-23 • பெய்ரி சைமன் லேப்லாஸ் (1749) - பிரான்ஸை சேர்ந்த இவர், கணித இயற்பியலில் இவரது கண்டுபிடிப்பு லேப்லாஸ் விதி. மார்ச்-24 • ஜோசப் ஸ்டீபன் (1835) - ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், கணிதம் மற்றும் இயற்பியலில் வகுத்துக் கொடுத்த ஸ்டீபன்- போல்ட்ஸ்மென் விதி, ஸ்டீபன் சிக்கல், ஸ்டீபன் சூத்திரம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இவரது ஆய்வுப் பெருமையை பறை சாற்றி நிற்கின்றன. மார்ச்-26 • சர் பெஞ்சமின் தாம்ஸன் (1753) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், வெப்ப இயக்க விசைகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். மார்ச்-27 • வில்ஹெம் ராண்ட்ஜென் (1845) - ஜெர்மனை சேர்ந்த இவரது கண்டுபிடிப்பு - எக்ஸ் கதிர் அல்லது ராண்ட்ஜன் கதிர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901- ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். மார்ச்-27 • ஹார்ட்ரி (1897) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், அணுக்கரு இயற்பியலில் எண்ணியல் பகுப்பாய்வை மேற்கொண்டவர். மார்ச-30 • ராபர்ட் புன்சேன் (1811) - ஜெர்மனைச் சேர்ந்த இவர், வேதியல்