YEARS
|
LIFE
|
1878
|
ஐெர்மனியில் "உல்ம்" என்ற ஊரில் பிறக்கிறார். "உல்ம்" ஐனங்களெல்லாம் கணக்கு புலிகள் என்பது பழமொழி.
|
1895
|
வயது 16 முதல் ஆய்வுக்கட்டுரை வெளியிடுகிறார் "ON THE INVESTIGATION OF STATE OF
ETHER IN A MAGNETIC FIELD" ^காந்தப்புலத்தப்புலத்தில் ஈத்தரின் நிலை பற்றிய விசாரணை^ என்பது அது.
|
1900
|
ஸீரிச் பாலிடெக்னிக்கில் பட்டம் முடிக்கிறார்..
|
1901
|
ஸ்விஸ் குடிமகனாகிறார்.
|
1897
|
மைக்கேல் பெஸ்ஸோ என்ற பொறியியலாளரின் நட்பு கிடைக்கிறது. விழ்நாள் முழுவதும் நட்பு தொடர்கிறது. தன் கருத்துக்களை இவரிடம் தான் முதலில் தெரிவிப்பர்.
|
1902
|
மிலெவா என்ற பெண் மூலம் லீய்ஸெரி என்ற மகளைப் பெற்றெடுக்கிறார். அந்தப் பெண் குழந்தையைப் பற்றி யாருக்கும் தெரியாது! அவள் இறந்து போயிருக்கலாம்! பேடன்ட் அலுவலகத்தில் குமஸ்த்தா வேலைபார்க்கிறார்.
|
1902
|
மிலெவா என்ற பெண் மூலம் லீய்ஸெரி என்ற மகளைப் பெற்றெடுக்கிறார். அந்தப் பெண் குழந்தையைப் பற்றி யாருக்கும் தெரியாது! அவள் இறந்து போயிருக்கலாம்! பேடன்ட் அலுவலகத்தில் குமஸ்த்தா வேலைபார்க்கிறார்.
|
1905
|
அதிசய அட்சய வருடம்!!! புதுப்புது கருத்துக்களும் தத்துவங்களும் உதித்த வருடம் ஒளி மின் விளைவு பற்றியும் தெரிவித்தது சிறப்பு சார்பியல் தத்துவம் பிறந்த வருடம் E=MC^2 என்ற பார்முலா உதித்த நேரம்.
|
|
"எனக்கு மிகுந்த ஆனந்தம் கொடுத்த சிந்தனை" என்று குறிப்பிட்ட பொது சார்பியல் தத்துவம் உதித்த நேரம். முடுக்கம் நீறையீர்ப்பு விசை இரண்டும் ஒன்றே!
|
1909
|
ஸுரிச் பல்கலையின் சிறப்பு தகுதி புரபஸராக நிர்ணயம்.
|
1910
|
மகன் எட்வர்ட் பிறப்பு
|
1914
|
பெர்லின் பல்கலை புரபஸராக நியமனம். பிரஸ்ஸியன் அகடமி ஆப் சைன்ஸ் உறுப்பினராதல் மெய்லீவாவை விட்டு விலகி வாழ்தல் தன் மகன்கள் இருவருடன் அவள் ஸீரிச் சென்றுவிடுதல்
|
1916
|
பொது சார்பியல் தத்துவம் பிரசுரமாதல்.
|
|
லேசர் பற்றிய கட்டுரை.
|
|
மெய்லிவாவை விவாகரத்து செய்துவிட்டு மாமன் மகள் எல்ஸாவை மணத்தல் பொது சார்பியல் தத்துவம் பரிசோதனை பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல் தந்தி மூலம் பெறுகிறார்.
|
|
தாய் பவுலைன் மரணம்
|
|
முதல் அமெரிக்க விஜயம் கதாநாயகன் போன்ற வரவேற்பு
|
|
அறிவுடைமை பற்றிய அகில உலக முன்னணி கமிட்டியின் உறுப்பினராதல்..
|
|
இயல்பியல் நோபல் பரிசினை பெறுகிறார் "சர்வமும் ஒரே சக்தி" என்ற கொள்கை பற்றி சிந்திக்கிறார்.
|
|
இந்திய அறிஞர் S.N.போஸுடன் சேர்ந்து போஸ்-ஐன்ஸ்டின் உருக்குலைவு ஆய்வினை வெளியிடுதல்.
|
1928
|
உடல் நலிவு 4 மாதம் படுக்கை.
|
1930
|
மகன் ஆல்பர்ட் மூலம் பேரன் பெர்ஹார்டு கிடைத்தல்.
|
1931
|
ஹப்புள்- ஐன்ஸ்டின் சந்திப்பு. அண்டம் விரிவடைவதை ஏற்றுக் கொள்கிறார். அதனால் தனது முந்தைய கருத்து ஒன்றை தவறு என்று ஒத்துக் கொள்கிறார். அதன் பெயர் 'பிரபஞ்ச மாறிலி'
|
1932
|
ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுமை பிடிக்காமல் மனைவி எல்ஸாவுடன் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஐி (அமெரிக்கா) வந்து ஒரு வருடம் கழித்து திரும்புவதாக உத்தேசித்தல்.
|
1933
|
பிரின்ஸ்டன் விஜயம் நாஸிகள் ஐன்ஸ்டின் வீட்டை சோதனையிடுதல். அவரது தம்பி மகள் மூலம் எல்லா ஆய்வுக் கட்டுரையும் இரகசியமாக காப்பாற்றப்பட்டு பெற்றுக் கொள்ளுதல்.
|
1935
|
போரிஸ் போடோல்ஸ்கி, மற்றும் நாதன் ரோஸன் ஆகியோருடன் சேர்ந்து குவாண்டம் இயங்கியல் பற்றி கட்டுரை எழுதுதல்
|
1936
|
இரண்டாம் மனைவியான எல்ஸா(60 வயது) மரணமடைதல்
|
1939
|
அமெரிக்க அணு ஆயுதம் தயாரிக்கலாம் என்று விண்ணப்பத்தில் கையெழுத்திடுதல்.
ஆனால் அணு ஆயுத தயாரிப்பில் எந்த விதத்திலும் ஈடுபடாதிருத்தல்.
|
1940
|
அமெரிக்க குடியுரிமை பெறுதல்.
|
1948
|
முதல் மனைவி மெய்லிவா மரணம்
|
1952
|
இஸ்ரேல் நாட்டின் இரண்டாம் பிரதமராக விடுத்த அழைப்பை நிராகரிகரித்தல் (இவர் ஒரு யூதர்)
அவாகளது அன்பினை பாராட்டுதல். |
1955
|
அணு ஆயுத ஒழிப்புக்கான பிரகடனத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டு பெர்ட்னார்டு ரஸ்ஸலுக்கு (கடைசி) கடிதம் எழுதுதல் உயிர் நீத்தல்.
|