ரூ.20ல் பெட்ரோல், டீசலுக்கு மாற்றுவழி கண்டுபிடித்த நம்மவூர் விஞ்ஞானி.!

இந்தியாவில் தண்ணீர் என்பது எப்படி பிரச்னையோ அதே மாதிரி பொது மக்களுக்கு பெட்ரோல், டீசலும் தான் பிரச்னை. தண்ணீர் என்பது அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது. ஆனால் பெட்ரோலும், டீசலும் விரைவாகவே கிடைக்கும்.
ரூ.20ல் பெட்ரோல், டீசலுக்கு மாற்றுவழி கண்டுபிடித்த நம்மவூர் விஞ்ஞானி.



இதுகுறித்து இனி காணலாம்.
மக்கள் தொகை பெருக்கம்:

மக்கள் தொகை பெருக்கம்:

இந்தியா உலக நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்தில் 2வது இடத்தில் இருக்கின்றது. இதற்கு ஏற்றார் போல் பொது மக்களிடம் வாகன வசதிகளும் பெருகிக் கொண்டே வருகின்றது.
புதிய புதிய வாகங்களும் விற்பனைக்கும் வருகின்றன.

சுற்றுச்சூழல் மாசு:

இந்தியாவில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால், வாகனங்களில் இருந்து வெளியும் வாயுக்களால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகின்றது.
இதுவும் இன்று வரை தீர்க்க முடியாத பெரும் பிரச்னையாக இருக்கின்றது.
விலை வாசி உயர்வு பிரச்னை:

விலை வாசி உயர்வு பிரச்னை:

வாகனங்கள் இயக்க இன்று வரை மிகவும் பயன்படுத்த கூடியதாகவும் இருக்கின்றது பெட்ரோல், டீசல் . இதற்கு மாற்றாக எத்தனால் என்ற எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டால் பல்வேறு பிரச்னைகளால் இன்றும் பயன்படுத்த நிலையில் இருகின்றது.
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசலின் விலைவாசியும் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இந்த பிரச்னைகளுகம் எல்லாம் எப்போது தான் தீர்வு வரும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். தற்பேது நம்ம ஊர் காரர் புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளார்.

ரூ.20 செலவில் மாற்று எரிபொருள்:

பெட்ரோல், டீசல், மின்சாரத்திற்கு மாற்று சோலார் தான் என்று எண்ணி வந்த நிலையில், பல விஞ்ஞானிகளையும் அடித்து துவம்சம் செய்யும் வகையில், ரூ.20 செலவில் புதிதாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார் நம்ம ஊர் விஞ்ஞானி. 
ஹைட்ராஜன் வாயுவை எரிபொருளாக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் இது. 11ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விஞ்ஞானி நம்ம சவுந்தர் ராஜன் தான். இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர். இவரின் முழுப்பெயர் சவுந்தரராஜன் குமாரசாமி.

100 சிசி வாகனத்தை இயக்கலாம்:

நீரைக் கொதிக்க வைத்து அதன் நீராவியை குளிரச் செய்வதன் மூலம் கிடைப்பது தான் டிஸ்டில்டு வாட்டர். இந்த நீரை, 10 லிட்டர் அளவுக்கு எஞ்சினில் ஊற்றினால் ஒரு கிலோ ஹைட்ரஜனை, உற்பத்தி செய்யும். அதை வைத்து 100 சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனத்தில் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்க முடியும்.
நம்பிக்கை:

நம்பிக்கை:

கார் தொடங்கி கப்பல் வரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்பது சவுந்தரராஜனின் நம்பிக்கை. ஹைட்ரஜன் வாயுவை உபயோகப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.

பிரச்னைகள்:

விலை அதிகம், கையாள்வது கடினம், இருப்பு வைப்பதில் சிக்கல் என பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் சவுந்தரராஜன் கண்டுபிடித்துள்ள எஞ்சினானது ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து, எரிபொருளாக மாற்றும். அந்த எஞ்சினில் இருந்து நீராவியும் ஆக்சிஜனும் மட்டுமே வெளியேறும்.

10 ஆண்டு கனவு:

இந்த எஞ்சினுக்கு காப்புரிமை பெற்றுள்ள இவர், ஜப்பானில் உள்ள தனது நிறுவனத்தின் மூலம் விரைவில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளார். சுற்றுச்சூழல் மாசை நினைவில் கொண்டு, 10 ஆண்டுகளாக சவுந்தரராஜன் கண்ட கனவு தற்போது நனவாகி உள்ளது.