Chapter 2 பேட்டரி இல்லா செல்போன்கள் || Make Calls Without Ever Charging a Battery

பேட்டரி இல்லா செல்போன்கள் அமெரிக்க ஆய்வாளர்கள் அசத்தல்
• உலகின் பேட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
• ஸ்மார்ட்போன் உலகில் பெரும் சவாலாக இருப்பது பேட்டரி சார்ஜ்தான்.
• அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய பேட்டரிகளே இல்லாத செல்போன்களை வடிவமைக்கும் முயற்சியில் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.
• அந்த முயற்சியில் தற்போது வெற்றி கிட்டியுள்ளது.
• சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
• அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசியும் அவர்கள் அசத்தியுள்ளனர்.
• இதுதொடர்பாக பேசிய ஆய்வுக்குழுவைச் சேர்ந்த ஷ்யாம், மிகக் குறைவிலான ஆற்றலைப் பயன்படுத்தும் செல்போன்களை எங்களது குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
• மக்களின் அத்தியாவசியத் தேவையாகிவிட்ட செல்போன்களுக்குத் தேவையான ஆற்றலை சுற்றுப்புறங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த புதிய செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
• ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
• இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
• முதற்கட்டமாக ரேடியோ அலைகளை அனுப்பும் பிரத்யேக மையங்கள் மூலம் செல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இன்கமிங், அவுட்கோயிங் கால்கள் மற்றும் இணையதள இணைப்பு ஆகியவற்றை குழுவினர் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
• வணிகரீதியில் இந்த செல்போன் பயன்பாட்டுக்கு வரும்பொழுது வைஃபை அல்லது செல்போன் சேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசை ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

What is the Battery Free Phone?
We present the first battery-free cellphone design that consumes only a few micro-watts of power. Our design can sense speech, actuate the earphones, and switch between uplink and downlink communications, all in real time. Our system optimizes transmission and reception of speech while simultaneously harvesting power which enables the battery-free cellphone to operate continuously. The battery-free device prototype is built using commercial-off-the-shelf components on a printed circuit board. It can operate on power that is harvested from RF signals transmitted by a basestation 31 feet (9.4 m) away. Further, using power harvested from ambient light with tiny photodiodes, we show that our device can communicate with a basestation that is 50 feet (15.2 m) away. Finally, we perform the first Skype call using a battery-free phone over a cellular network, via our custom bridged basestation. This we believe is a major leap in the capability of battery-free devices and a step towards a fully functional battery-free cellphone.

மேலும் விவரங்களுக்கு :
1. https://batteryfreephone.cs.washington.edu/files/batteryFreePhone.pdf
2. https://batteryfreephone.cs.washington.edu/
What is the Battery Free Phone?
சில மைக்ரோ-வாட் சக்தியை மட்டுமே பயன்படுத்தும் முதல் பேட்டரி இல்லாத செல்போன் வடிவமைப்பை நாங்கள் வழங்குகிறோம்.
எங்கள் வடிவமைப்பால் பேச்சை உணர முடியும், இயர்போன்களை இயக்க முடியும், மற்றும் அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் தகவல்தொடர்புகளுக்கு இடையில் மாறலாம், அனைத்தும் நிகழ்நேரத்தில்.
பேட்டரி இல்லாத செல்போனை தொடர்ந்து செயல்படச் செய்யும் ஆற்றலை ஒரே நேரத்தில் சேகரிக்கும் போது எங்கள் அமைப்பு பேச்சின் பரிமாற்றத்தையும் வரவேற்பையும் மேம்படுத்துகிறது.
பேட்டரி-இல்லாத சாதனத்தின் முன்மாதிரி அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டில் வணிக-ஆஃப்-தி-ஷெல்ஃப் கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
31 அடி (9.4 மீ) தொலைவில் உள்ள பேஸ்ஸ்டேஷன் மூலம் அனுப்பப்படும் RF சிக்னல்களில் இருந்து பெறப்படும் சக்தியில் இது செயல்பட முடியும். மேலும், சிறிய ஃபோட்டோடியோட்கள் மூலம் சுற்றுப்புற ஒளியில் இருந்து சேகரிக்கப்பட்ட சக்தியைப் பயன்படுத்தி, எங்கள் சாதனம் 50 அடி (15.2 மீ) தொலைவில் உள்ள பேஸ்ஸ்டேஷனுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறோம்.
இறுதியாக, எங்கள் தனிப்பயன் பிரிட்ஜ் பேஸ்ஸ்டேஷன் வழியாக செல்லுலார் நெட்வொர்க்கில் பேட்டரி இல்லாத தொலைபேசியைப் பயன்படுத்தி முதல் ஸ்கைப் அழைப்பைச் செய்கிறோம்.
பேட்டரி இல்லாத சாதனங்களின் திறனில் இது ஒரு பெரிய பாய்ச்சல் மற்றும் முழுமையாக செயல்படும் பேட்டரி இல்லாத செல்போனை நோக்கிய ஒரு படி என்று நாங்கள் நம்புகிறோம்.