இனி கரண்ட் பில் கவலை இல்லை? பூமி சுழற்சியில் இருந்து மின்சாரம் தயாரித்து விஞ்ஞானிகள் புரட்சிகர சாதனை!
பூமியின் சுழற்சி மற்றும் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் புதிய கருவியை நாசா மற்றும் பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
பூமியின் சுழற்சி மற்றும் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் புதிய கருவியை நாசா மற்றும் பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/12/22/electricity-from-earth-rotation-2025-12-22-12-55-57.jpg)
இனி கரண்ட் பில் கவலை இல்லை? பூமி சுழற்சியில் இருந்து மின்சாரம் தயாரித்து விஞ்ஞானிகள் புரட்சிகர சாதனை!
சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சாரம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சூரிய ஒளியும், காற்றும்தான். ஆனால், சூரியன் மறையும் போதோ அல்லது காற்று வீசாத போதோ இந்த மின் உற்பத்தி தடைபடுகிறது. இந்த சிக்கலுக்குப் புதிய தீர்வாக, நாம் வாழும் பூமி சுழல்வதைப் பயன்படுத்தியே மின்சாரம் தயாரிக்கும் புரட்சிகரமான கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலை. மற்றும் நாசாவின் ஜேபிஎல் (JPL) ஆய்வக விஞ்ஞானிகள் இணைந்து இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.
முக்கிய அம்சங்கள்:
தற்போதைய சோதனையில் 17 மைக்ரோவோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது மிகச்சிறிய அளவு என்றாலும், ஒரு கோட்பாடு உண்மையானது என்பதை (Proof of Concept) இது உறுதிப்படுத்தியுள்ளது. நிலக்கரி, பெட்ரோல் அல்லது யுரேனியம் போன்ற எந்த எரிபொருளும் இதற்குத் தேவையில்லை. சூரிய ஒளி பகலில் மட்டுமே கிடைக்கும், காற்று எப்போது வீசும் என்று தெரியாது. ஆனால் பூமியின் சுழற்சி என்றும் நிற்காது என்பதால், 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் பெற முடியும்.