காஸ்மிக் கதிர்கள்

காஸ்மிக் கதிர்வீச்சில் பல்வேறு வகையான துகள்கள் காணப்படுகின்றன. ஒரு வகையான துகள்களின் இருப்பிடங்கள் அமெரிக்க அறிவியல் அறிஞர் சார்லஸ் ஆண்டெர்சனால் 1932இல் கண்டறியப்பட்டது. அவ்வப்போது ஏற்படும் காஸ்மிக்-கதிர்ப் பொழிவுகளுக்கான காரணம் எலெக்ட்ரான்கள் எனப்படும் மற்றொரு வகையான துகள்கள்தான். மேலும் புரோட்டான்கள், நியூட்ரான்கள், ஆல்பா, காமாக் கதிர்கள் மற்றும் மீசான்கள் ஆகியவையும் காணப்படுகின்றன. மீசான்கள் வேறுவகையானவை; பெரும்பாலும் நிலையற்றவை, குறைந்த காலத்தில் அழிந்து விடுபவை. பல்வேறு கண்டுபிடிப்புகள் வாயிலாக காஸ்மிக் கதிர்கள் மற்ற கதிர்களிலிருந்து வேறுபட்டவை என்பது தெரிய வந்துள்ளது. நிலையான மற்றும் நிலையற்ற, இலேசான மற்றும் கனமான மற்றும் பல்வேறு தனிமங்களின் உட்கருக்கள் ஆகிய பல்வகைத் துகள்கள் இக்கதிர்களின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் இருப்பதும் அறியப்பட்டது. இவை வான்வெளி அல்லது சூரியனில் இருந்து வெளிவந்தவை என அறிவியலார் கருதினர். சில விண்மீன் திரளிலிருந்து இவை உற்பத்தியானவை என வேறு சில அறிஞர்கள் கருதினர். ஆனால் எந்த தாரமும் உண்மைகளின் அடிப்படையில் உறுதி செய்யப்படவில்லை. இந்தக் கதிர்களை எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளாவது கொண்டுவந்து, எதிர்கால ஆற்றல் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை இதுவரை அறிவியல் அறிஞர்களால் உருவாக்க இயலவில்லை. கட்டுப்பாட்டிற்குள் இக்கதிர்கள் கொண்டுவரப்பட்டால், மின் ஆற்றலுக்கும், எரிபொருளுக்கும் மாற்றாக அது அமையும் எனக் கருதப்படுகிறது. ப.தக்சணாமூர்த்தி.