PART-C(II) Regoinal Language-Tamil 76-78: கீழ்க்கண்ட சொற்களுக்கு பொருள் தருக: 76. களிறு Ans: (A) யானை 77. அரிமா Ans: (D) சிங்கம் 78. பரி Ans: (B) குதிரை 79-81: கீழ்க்கண்ட சொற்களுக்கு எதிர்ச்சொல் தருக: 79. நல்லோர் Ans: (C) தீயோர் 80. உயர்ந்தோர் Ans: (D) தாழ்ந்தோர் 81. இன்சொல் Ans: (A) வன்சொல் 82-84: சொற்களைப் பிரித்து எழுதுக: 82. செந்தாமரை Ans: (B) செம்மை+தாமரை 83. வண்டினம் Ans: (A) வண்டு+இனம் 84. தண்ணீர் Ans: (C) தண்மை+நீர் 85-87: கீழ்க்கண்ட சொற்றொடர்களில் உள்ள பிழையைக் குறிப்பிடுக: 85. இந்தக் கொதிகளனின் கொள்ளளவு மிகவும் அதிகம் Ans: (B) கொதிகளனின் 86. பிறப்புக்கும் இரப்பிற்கும் இடையே உள்ளதே வாழ்க்கை Ans: (B) இரப்பிற்கும் 87. உங்களை நான் மனதார வரவேற்க்கின்றேன் Ans: (C) வரவேற்க்கின்றேன் 88-90: கீழ்க்கண்ட வரிகளை எழுதியவர் யார்? 88. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்____ Ans: (B) பாரதியார் 89. தமிழுக்கு அமுதென்று பேர் Ans: (C) கண்ணாதாசன் 90. நீரின்றி அமையாது 91-92: கீழ்க்கண்ட வாக்கியங்களின் வகையினைக் குறிப்பிடுக: 91. நீ எப்போது இங்கே வருவாய் Ans: (A) வினா வாக்கியம் 92. நீ உடனே இங்கே வா Ans: (B) கட்டளை வாக்கியம் 93-95: கீழ்க்கண்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு தேர்வு செய்க: 93. செந்தாமரை Ans: (B) பண்புத்தொகை 94. ஊறுகாய் Ans: (A) வினைத்தொகை 95. மலர் விழி Ans: (B) உவமைத்தொகை 96. இவற்றுள் எது முத்தமிழ் இல்லை? Ans: (A) செந்தமிழ் 97. இவற்றுள் எது முக்கனி இல்லை? Ans: (B) கொய்யா 98. இவற்றுள் எது ஐவகை நிலங்களுக்குள் இல்லை? Ans: (D) உவர் 99. ராமாயணமும், மகாபாரதமும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? Ans: (C) இதிகாசங்கள் 100. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற சொற்றொடரில் உண்டி என்ற சொல்லின் பொருள் Ans: (D) உணவு