பிரேசிலியா
: மூச்சு காற்றில் இருந்து மின்சாரம் தயாரித்து,
செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் கருவி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செல்போனில் முக்கியமாக பேசிக்கொண்டிருக்கும்போது, சார்ஜ் குறைந்து பேட்டரி
‘மூச்சு திணற’ ஆரம்பிக்கும். கண்டுகொள்ளாமல் பேசினால், கடைசி மூச்சை நிறுத்திவிட்டு
செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடும். இது
தினம்தினம் பலரும் அனுபவிக்கும் தொல்லை.
அந்த கவலை இனி தேவையில்லை.
நாம் சுவாசிக்கும் மூச்சு காற்றிலேயே செல்போனை
சார்ஜ் செய்துகொள்ளும் புதிய முகமூடி சார்ஜர்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோகோ
பாலோ லமோக்லியா என்ற வாலிபர் இதை
கண்டுபிடித்திருக்கிறார். டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள்
அணியும் மூக்கு கவசம் போல
இருக்கிறது இந்த கருவி. நடை
பயிற்சி, ஓட்டப்பயிற்சி, டிவி பார்க்கும்போது, வேலை
செய்யும்போது, தூங்கும்போது என எந்த நேரத்திலும்
இதை அணிந்துகொள்ளலாம். முகமூடிக்குள் சிறிய மின்விசிறி இருக்கிறது.
மூச்சு காற்று வெளியேறும்போது மின்விசிறி
சுழலும். மினி டர்பைன் சுற்றுவதால்
காற்று மின்சாரம் உருவாகிறது. அவ்ளோதான்.. அதில் இணைக்கப்பட்டிருக்கும் வயர் மூலமாக
செல்போன், ஐபாட், டிஜிட்டல் கேமரா,
ஹேண்டிகேம் என எதை வேண்டுமானாலும்
சார்ஜ் செய்து கொள்ளலாம். பெருமூச்சு
விட்டால், மூச்சிரைக்க ஓடினால் விசிறி வேகமாக
சுற்றி அதிக மின்சாரம் கிடைக்குமாம்.
இதற்கிடையில், ‘ஸ்பேர்ஒன்’ என்ற பெயரில் குறைந்த
சார்ஜில் இயங்கும் செல்போன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சார்ஜ் நீடித்திருக்க
வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்
என்பதால் வெறுமனே பேசலாம், மெசேஜ்
அனுப்பலாம். மற்ற வசதிகள் கிடையாது.
ஒரு முறை சார்ஜ் செய்தால்,
நான்-ஸ்டாப்பாக 10 மணி நேரம் வரை
பேசலாம். விலை ரூ.3,500.