காந்த சக்தியின் செயல்பாடுகள் Influence of Magnetic Forces பண்டைய மனிதர்கள் பூமியின் மின் காந்த அலைகள் பற்றிய அறிவு பெற்றிருந்தார்கள். மனித உடல், மனது இவற்றை பாதிக்கம் எளிதில் அறிய முடியாத அதிர்வின் அளவையும் அறிந்திருந்தார்கள். காரணம் மனித உடலும், மின் காந்த துண்டு போன்ற குணங்கள் உடையது. மனிதன் தலையை வடதிசை வைத்து உறங்கும்போது வித்தியாசமான இரு துருவங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதால் தூக்கம் கெடுகிறது. ஆதலால் வடதிசை தலைவைத்து உறங்குவது கூடாது என்று வாஸ்து கூறுகிறது. ஆயிரம் இதழ்கள் உடைய தாமரை உள்ள தலை உச்சி வழியாக, அறிய முடியாத மின்காந்த சக்தி பரவுகிறது. இது தண்டு வடம் வழியாக கீழே உள்ள எல்லா நரம்பு மண்டலங்களுக்கும் பரவுகிறது. இந்த சக்தி சரியான விகிதத்தில் இன் பேலன்ஸ் வைத்திருப்பதால் நல்ல உடல் நலம் காப்பாற்றப்படும். பூமி காந்த அலை சரியாக அமைத்து கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு சகல நன்மையும் அளிக்கிறது. வாஸ்துக்க ஏற்ப வீட்டில் வசிக்கும் இடம் Living Spacess வடதிசையில் (True North) ல் உள்ளது. காலை சூரியனின் நன்மை பயங்கும் கதிர்கள் கிழக்கிலிருந்து நுழைகிறபோது பூமியின் மின்காந்த விசை வடக்கு நோக்கி இழுக்கிறது. அப்போது வடகிழக்கிலிருந்து தென்மேற்காக காஸ்மிக் எனர்ஜி நகருவதை பண்டைய மனிதர்கள் கண்டறிந்தார்கள். வடகிழக்கு திசை ஈசான்யம் எனப்படும். ஈசான்யம் என்றால் பரிசுத்தம். அது வையகத்தில் உள்ள எல்லா நல்லவைகளையும் குறிக்கிறது. வீட்டில் தென்மேற்கு மூலையில் கதவு அல்லது வெளியேறும் வாசல் வைக்கக்கூடாது என வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இது வடகிழக்கு மூலையிலிருந்து தென்சக்தியை வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காகவே.