தற்போது நாம் பயன்படுத்தும் மின்சார உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் டைனமோவைக் கண்டறிந்தவர் மைக்கேல் பாரடே. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இரும்புக் கொல்லரின் மகனாகப் பிறந்த இவர் தமது 13 வது வயதில் ஒரு அச்சகத்தில் புத்தகங்களுக்கு அட்டை ஒட்டும் பணியாளராக வேலைக்குச் சேர்தார். அச்சகத்துக்கு வரும் எல்லாப் புத்தகங்களையும் படித்துத் தமது அறிவை வளர்த்துக் கொண்டார். ஒருமுறை லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் புகழ் பெற்ற விஞ்ஞானி "சர்.ஹம்ப்ரி டேவி" ஆற்றய சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு பாரடேவுக்குக் கிட்டியது. சொற்பொழிவை ஆர்வத்துடன் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டார். அக்குறிப்புகளைப் புத்தக வடிவில் தைத்து. அதை டேவிக்கு அனுப்பி வைத்தார். கூடவே டேவியின் ஆராய்ச்சிக்கூடத்தில் தான் பணி புரிய விரும்புவதாக விண்ணப் பித்தார்..
அவரது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட டேவி தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேலை அளித்தார். என்ன வேலை தெரியுமா? ஆராய்ச்சிக்கூடத்தைத் துப்புரவு. உழைப்பு, உழைப்பு அய்ராத உழைப்பு! இது ஒன்றே பாரடேவின் உயிர்மூச்சாக இருந்தது. தனக்கு இடப்பட்ட பணிகளின் கூர்ந்து கவனித்து வந்தார். குறுகிய காலத்திலேயே தமது யோசனைகளை டேவியிடம் தெரிவித்து, அவரிடம் தானே பரிசோதனைகளைச் செய்ய அனுமதி பெற்றார்.
காந்தத்தையும் கம்பிச்சுருள்யும் பயன்படுத்தி முதல் *டைனமோ* வைக் கண்டுபித்தார். அதுவரை மின் ஆராய்ச்சியில் மந்த நிலையிலிருந்த அறிவியல் உலகம் துரித வேகம் எடுக்கத் தொடங்கியது. எந்த ராயல் சொசைட்டியின் வாசலை ஆர்வத் துடனும் ஏக்கத்துடனு நின்று பார்த்தாரோ, அங்கேயே தலைவராக நியமிக்கப்பட்டார்..