சேரில் அமர்ந்தால் ஷாக்!


கோவையில் ஒரு விநோதம்கொங்கு மண்டலமான கோவையில் அவ்வப்போது பரபரப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டதுஅந்த வகையில் கடந்த வியாழனன்று கோவை பொதுமக்கள் மத்தியில் விட்டலாச்சார்யா பட ஸ்டைலில் ஏற்பட்ட சலசலப்பு சிரிக்க வைத்தாலும்எல்லோரையும் சிந்திக்கவும் வைத்துள்ளது.
கோவை மாநகரின் மையப்பகுதியான மில்ரோடுதியாகராஜா புதுவீதியில்தான் அந்தப் பரபரப்புநாம் சென்ற சமயம் அந்த வீதி முழுவதும் பொதுமக்கள் சூழ்ந்திருந்தனர்ஏதோ மாயாஜால வித்தைதான் நடக்கிறது என நினைத்துக் கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தோம்.
அங்கு போடப்பட்ட பிளாஸ்டிக் சேரில் ஒருவர் தரையில் கால்படாமல் அமர்ந்திருக்கசேரின் பின் பகுதியில் இன்னொருவர் துணியால் அடிக்கிறார்அப்போது கூடியிருந்தவர்களில் ஒருவர் சேரில் அமர்ந்து இருந்தவரின் கையைத் தொடடப் என்ற சத்தத்துடன் ஷாக் அடிக்கிறதுஇது ஒருவருக்குத்தான் என்றால் இல்லைஅனைவருக்கும் இதேபோல் ஷாக் அடிக்கபொதுமக்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அங்கிருந்த கார்த்திக் என்ற வாலிபர் நம்மிடம், ""நேற்று மாலை வீட்டில் எனது சித்தப்பா மகன்கள் ஷியாம் சுந்தரும்ராஜ்குமாரும் விளையாடிக் கொண்டிருந்தனர்பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து இருந்தான் ராஜ்குமார்அப்போது ஷியாம்சுந்தர் டவலால் சேரின் பின்னால் அடித்து அவனை எழுப்பஉடனே நான் "அவன்தான் சொல்றான்லநீ பேசாம எந்திரிசண்டை எதுக்குப் போடறீங்க'ன்னு சொல்லிட்டு ராஜ்குமாரின் கையைப் பிடிச்சேன்.
அப்ப திடீர்னு ஷாக் அடிச்சுச்சுஒரு நிமிஷம் உடம்பெல்லாம் பதறிகை-கால் நடுக்கம் வந்துச்சுஅப்புறம் இதை நான் எங்க அப்பாஉறவுக்காரங்கபொதுமக்கள் கிட்ட சொன்னேன். "என்னப்பாசேர்ல இருந்து ஷாக் அடிக்குமாஜோக் சொல்றதுக்கு நேரம் இல்லையா?'ன்னு காமெண்ட் அடிச்சாங்க.
அதுக்கப்புறம் அவுங்களையும் சேர்ல உட்கார வச்சு இதே மாதிரி டவலால் பின்னால் அடிச்சப்பதான்ஷாக் அடிச்சதா உண்மையை ஒத்துகிட்டாங்கஅப்புறமாத்தான் நான் இண்டிகேட்டர் வச்சு கையை டச் செய்தப்ப அது எரிந்ததுஇதுல ஏதோ விஷயம் இருக்குன்னு நினைச்சுகிட்டுஎலெக்ட்ரீஷியனை வரச் சொல்லி பார்த்தோம்அவரும் வீட்ல இருக்கிற மின் சாதனங்களை செக் பண்ணினார்.
மின் கசிவு ஒன்றும் இல்லைன்னு சொன்னதுக்கப்புறம் இதே மாதிரிரோட்ல செஞ்சுப் பார்த்தோம்அங்கேயும் அத்தனை பொதுமக்கள் முன்னாடியும் இதே மாதிரி பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து இருந்தவரை ஒருவர் தொடஅவரின் உடலில் இருந்து மின்சாரம் வந்து ஷாக் அடித்தது போல் இருந்தது'' என்று அதிர்ச்சி விலகாமல் பேசினார்.
இதையடுத்து லஷ்மி பிரபா என்பவர் நம்மிடம்,
""ஆரம்பத்தில் நாங்க யாரும் இதை நம்பலைசின்னப்பசங்க விளையாடும்போது கையில் முழங்கையில் அடிபட்டா ஷாக் அடிச்சது மாதிரி இருக்கும்அதைத்தான் இப்படி சொல்றாங்கன்னு நினைச்சோம்.
எதுக்கும் உண்மையைத் தெரிஞ்சுக்க நான் தைரியமா சேரில் உட்கார்ந்தேன்என் முதுகுக்குப் பின்னாடி சேரில் டவலால் அடிச்சாங்கஅப்ப பக்கத்துல இருந்தவரு என் கையைத் தொடும்போதுதிடீர்னு என் உடலில் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி உதறல் எடுத்துச்சுஅதிலிருந்து சுதாரிப்பதற்கு ரொம்ப நேரம் ஆச்சு....'' என்றார் திகிலோடு.
இந்நிலையில் இந்த விஷயம் காட்டுத் தீ போல பரவசம்பவ இடத்திற்கு போலீஸôரும்மின்சாரத்துறை அதிகாரிகளும் வந்தனர்அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுபிறகு அதேபோல் பிளாஸ்டிக் சேரில் மின்துறை அதிகாரி ஒருவர் அமர்ந்து கொள்ளசேரின் பின்பகுதியில் டவலால் மற்றொருவர் அடித்தார்உடனே இன்னொருவர் அவரது கையைப் பிடிக்க ஷாக் அடித்தது.
அதேபோல் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சேரில் அமர்ந்து இருந்த சிறுவனைத் தொடஅவருக்கும் ஷாக் அடித்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் நாமும்மின்துறை அதிகாரிகளும்போலீஸôரும்வேறு வீதியில் உள்ள ஒரு வீட்டில் இதே மாதிரி செய்ய அங்கும் ஷாக்இதில் அனைவருக்கும் அதிர்ச்சி.
இது குறித்து மின்துறை அதிகாரி மூர்த்தியிடம் நாம் பேசினோம்.
""பொதுவாக டெலிஃபோன் கம்பத்தில் செல்லும் வயர்களை நாம் தொட்டாலே ஒரு வித ஷாக் அடிக்கும்அதில் 25 வோல்ட் மின்சாரம் இருக்கும்தற்போது சேரில் அமர்ந்து இருப்பவரைத் தொட்டபோது ஷாக் அடிக்கிறது.
இதில் மின்சாரம் 25 முதல் 30 வோல்டேஜ் இருக்க வாய்ப்பு உள்ளதுஆனால் எங்கேயும் மின் கசிவும் இல்லைஉயர் அழுத்த மின் கம்பிகளும் இந்தப் பகுதியில் செல்லவில்லைபிறகு எப்படி இந்த வினோதம் நடக்கிறது என்பது எங்களுக்கே புரியவில்லை'' என்றார் ஆச்சரியமாக.
சேரில் ஷாக் அடிக்கும் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை யாருக்கும் எதுவும் புரியவில்லை என்றாலும்ஒட்டு மொத்தத்தில் அனைவருக்கும் இந்தப் பிரச்சினை ஒரு ஷாக்தான்ஏற்கெனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிள்ளையார் பால் குடிப்பதுகடவுள் கண் திறப்பது போன்ற வரிசையில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனப் பலர் சொன்னாலும்கூட, "இந்த ஷாக் எப்படி ஏற்படுகிறது?''என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையில் இந்த ஷாக் மேட்டர் தற்போது கோவை முழுவதும் பரபரப்பாகிவிட்டதுஅவரவர்களும் தங்கள் வீடுகளில் இந்த "ஷாக் பயிற்சியைசோதனை செய்து பார்க்கின்றனர்இருப்பினும் இந்த அதிர்வு எதனால் ஏற்படுகின்றது என்பதை கண்டறிந்துபீதியில் இருக்கும் மக்களை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
பாபிரதீப்குமார் - தமிழன் எக்ஸ்பிரஸ் செய்தி