சூரிய கடிகார பிரமிடு!





உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் சிறந்தவையாக, இன்றும் அழியாமல் இருப்பது எகிப்தின் பிரமிடு. வெட்ட வெளியில் பிரமிடுகளை ஏன் கட்டினார்கள்? அவை மன்னர்களின் கல்லறை தானா அல்லது வேறு விஷயங்களுக்காக அவை கட்டப்பட்டதா? என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
கிசா பிரமிடு பகுதியில் உள்ள சியோப்ஸ் எல்லாவற்றையும் விட பெரியதாக உள்ளது. இது கி.மு.26-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1953-ம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் ஆய்வு செய்து அந்த பிரமிடு ஒரு சூரிய கடிகாரம் என்பதை கண்டுப்பிடித்தார்.
பிரமிடின் அளவும், அதன் உருவமும் நாள், மணி, பருவம் ஆகியவற்றை கணக்கிட உதவும் வகையில் அமைந்து இருப்பது தெரிய வந்தது. மையப் பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகள் துருவ நட்சத்திரத்தை காணும் வகையில் சரியாக 26 டிகிரி 17 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரமிடுகள் கல்லறையாக மட்டுமின்றி வானியல் ஆய்வு கட்டடமாகவும் பயன்பட்டதை கண்டுப்பிடித்தார். இங்கிலாந்தில் சாலிஸ்பரி சமவெளியில் பிரமாண்டமான கற்பாளங்கள் வட்டவடிவில் நடப்பட்டுள்ளன. இவை கி.மு.1900-ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1963-ம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானி ஹாக்கின்ஸ் என்பவர் அவற்றை ஆய்வு செய்து அவை ஆய்வுக்கூடம் என்று அறிவித்தார். சூரிய உதயம், அஸ்தமனம் பற்றி துல்லியமாக கணக்கிடவும், சந்திரனுடைய இயக்கம், சூரிய சந்திர கிரகணங்களை அறியவும் அமைக்கப்பட்டவை என்பது நிரூபணமாயிற்று. 

தினமலர் சிறுவர் மலர்