காஸ்மிக் கதிர்கள் (Cosmic Rays) அல்லது விண்கதிர்கள்




                                                       ப.தக்சணாமூர்த்தி.

காஸ்மிக் கதிர் கோவில்கள்

           பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா ? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும். அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று. அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு ( இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான். அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ ( சேஃப்ரான்),கிராம்பு ( கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க , மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம். கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம். அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ். அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி. கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி!



       இது எங்கிருந்து வருகிறது என்று சொல்ல முடியாதபடி எல்லா திசைகளிலும் எல்லா இடங்களிலும் என்று இருந்து கொண்டிருக்கும் ஒரு "ஒளி" இந்த ஒளிக்கு வெளிச்சம் கிடையாது காரணம் இதன் "அலை நிளம் மைக்ரோ வேவ்" அளவில் இருப்பதே ரேடியோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டி சிக்னல் இல்லாமல் இருக்கும் போது 'உஷ்ஷ்' என்ற ஒசையுடன் புள்ளிப் புள்ளியாகத் தெரியுமே இது இந்த நூண் அலைக் கதிர்விச்சினால் தான். காஸ்மிக் கதிர் விச்சுகள் விண் வெளியில் இருந்து பூமியைத் தாக்கி அதன் பரப்தில் அழமாக ஊடுருவுகின்றன. இது நேர்மின்னுட்டம் கொண்ட துகள்..
       காஸ்மிக்ரேய்ஸ்(COSMIC RAYS) யும் மின்காந்த அலைகள்தான். இவை ஒரு வினாடியில் போய்ச்சேரும் தூரம் 300000000 meter தான். காஸ்மிக் ஒரு வினாடியில் துடிப்பு=300,000,000,000,000,0 HZ(ஹெர்டஸ்) அதன் அலை நீளம்=0.0001 A.U.  என்பது ஆங்ஸ்ட்ரோம் யூனிட்.
       காஸ்மிக் கதிர்வீச்சில் பல்வேறு வகையான துகள்கள் காணப்படுகின்றன. ஒரு வகையான துகள்களின் இருப்பிடங்கள் அமெரிக்க அறிவியல் அறிஞர் சார்லஸ் ஆண்டெர்சனால் 1932இல் கண்டறியப்பட்டது. அவ்வப்போது ஏற்படும் காஸ்மிக்-கதிர்ப் பொழிவுகளுக்கான காரணம் எலெக்ட்ரான்கள் எனப்படும் மற்றொரு வகையான துகள்கள்தான். மேலும் புரோட்டான்கள், நியூட்ரான்கள், ஆல்பா, காமாக் கதிர்கள் மற்றும் மீசான்கள் ஆகியவையும் காணப்படுகின்றன. மீசான்கள் வேறுவகையானவை; பெரும்பாலும் நிலையற்றவை, குறைந்த காலத்தில் அழிந்து விடுபவை. பல்வேறு கண்டுபிடிப்புகள் வாயிலாக காஸ்மிக் கதிர்கள் மற்ற கதிர்களிலிருந்து வேறுபட்டவை என்பது தெரிய வந்துள்ளது. நிலையான மற்றும் நிலையற்ற, இலேசான மற்றும் கனமான மற்றும் பல்வேறு தனிமங்களின் உட்கருக்கள் ஆகிய பல்வகைத் துகள்கள் இக்கதிர்களின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் இருப்பதும் அறியப்பட்டது. இவை வான்வெளி அல்லது சூரியனில் இருந்து வெளிவந்தவை என அறிவியலார் கருதினர். சில விண்மீன் திரளிலிருந்து இவை உற்பத்தியானவை என வேறு சில அறிஞர்கள் கருதினர். ஆனால் எந்த தாரமும் உண்மைகளின் அடிப்படையில் உறுதி செய்யப்படவில்லை. இந்தக் கதிர்களை எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளாவது கொண்டுவந்து, எதிர்கால ஆற்றல் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை இதுவரை அறிவியல் அறிஞர்களால் உருவாக்க இயலவில்லை. கட்டுப்பாட்டிற்குள் இக்கதிர்கள் கொண்டுவரப்பட்டால், மின் ஆற்றலுக்கும், எரிபொருளுக்கும் மாற்றாக அது அமையும் எனக் கருதப்படுகிறது.
        சக்தியின் செயல்பாடுகள் Influence of Magnetic Forces பண்டைய காந்த மனிதர்கள் பூமியின் மின் காந்த அலைகள் பற்றிய அறிவு பெற்றிருந்தார்கள். மனித உடல், மனது இவற்றை பாதிக்கம் எளிதில் அறிய முடியாத அதிர்வின் அளவையும் அறிந்திருந்தார்கள்.
     காரணம் மனித உடலும், மின் காந்த துண்டு போன்ற குணங்கள் உடையது. மனிதன் தலையை வடதிசை வைத்து உறங்கும்போது வித்தியாசமான இரு துருவங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதால் தூக்கம் கெடுகிறது. ஆதலால் வடதிசை தலைவைத்து உறங்குவது கூடாது என்று வாஸ்து கூறுகிறது.
      ஆயிரம் இதழ்கள் உடைய தாமரை உள்ள தலை உச்சி வழியாக, அறிய முடியாத மின்காந்த சக்தி பரவுகிறது. இது தண்டு வடம் வழியாக கீழே உள்ள எல்லா நரம்பு மண்டலங்களுக்கும் பரவுகிறது. இந்த சக்தி சரியான விகிதத்தில் இன் பேலன்ஸ் வைத்திருப்பதால் நல்ல உடல் நலம் காப்பாற்றப்படும்.
     பூமி காந்த அலை சரியாக அமைத்து கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு சகல நன்மையும் அளிக்கிறது. வாஸ்துக்க ஏற்ப வீட்டில் வசிக்கும் இடம் Living Spacess வடதிசையில் (True North) ல் உள்ளது.
காலை சூரியனின் நன்மை பயங்கும் கதிர்கள் கிழக்கிலிருந்து நுழைகிறபோது பூமியின் மின்காந்த விசை வடக்கு நோக்கி இழுக்கிறது. அப்போது வடகிழக்கிலிருந்து தென்மேற்காக காஸ்மிக் எனர்ஜி நகருவதை பண்டைய மனிதர்கள் கண்டறிந்தார்கள். வடகிழக்கு திசை ஈசான்யம் எனப்படும். ஈசான்யம் என்றால் பரிசுத்தம். அது வையகத்தில் உள்ள எல்லா நல்லவைகளையும் குறிக்கிறது. வீட்டில் தென்மேற்கு மூலையில் கதவு அல்லது வெளியேறும் வாசல் வைக்கக்கூடாது என வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இது வடகிழக்கு மூலையிலிருந்து தென்சக்தியை வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காகவே.