Wi-Fi - லிருந்து மின்சாரம்

Wi-Fi சமிக்ஞையிலிருந்து மின்சாரம்: ஆராய்ச்சியாளர்கள் அதிரடி!

MIT – Massachusetts Institute of Technology நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
இச் சாதனத்தின் ஊடாக தற்போது கணினி வலையமைப்பிற்கு பயன்படுத்தப்படும் Wi-Fi சமிக்ஞையிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
அதாவது ஆடலோட்ட மின்காந்த அலையினை நேரோட்ட மின்னோட்டமாக மாற்றக்கூடியதாக இருக்கின்றது.
இச்சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள உணரிகள் மூலமாக Wi-Fi சமிக்ஞை குறை கடத்திகளினூடாக பயணிக்கின்றது.
குறைகடத்திகள் Wi-Fi சமிக்ஞைகளை நேரோட்டமின்னோட்டமாக மாற்றுவதன் ஊடாக இச் சாதனம் செயற்படுகின்றது.
குறித்த சாதனமானது முற்றிலும் மீள்தன்மை (Flexible) கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.