ஒளிச் சிதறல் கணித ரீதியாக மேதை ராமன் விளக்கினார்.
அதுவே ராமன் விளைவு ஆகும்.
ஒரு டேன்னிஸ் பந்தைக் கருங்கல் சுவர் மீது வீசி எறிகிறீர்கள்.
இந்தக் கருங்கல் சுவர் உறுதியானதால் எறியப்பட்ட பந்து சக்தி குறையாமல் அதே வேகத்துடன் திரும்ப வருகிறது.
இந்தக் கருங்கல் சுவருக்கு பதிலாக ஒரு கித்தான் சுவர் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
பந்து மோதியவுடன் கித்தான் சுவர் வளைந்து பந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும்.
இப்போது கருங்கல் சுவர் மீது பட்டபோது வந்த வேகத்துடன் பந்து திரும்பாது.